புதுதில்லியில் கடந்த சில தினங்களாக காற்று மாசுபாடு உச்சத்தில் இருந்து வருகிறது. இதன் உச்சகட்டமாக நேற்று, முன் எப்போதும் இல்லாத அளவில் காற்றில் மாசுவின் அளவு அதிகரித்து காணப்பட்டது. இதனால் நகரவாசிகள் அனைவரும் மாஸ்க் அணிந்தே வெளியே செல்ல வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். இந்நிலையில் காற்று மாசுபாடு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில் கேரட் சாப்பிட்டால் காற்று மாசுபாட்டை குறைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியுள்ளதாவது,
கேரட் சாப்பிடுவதன் மூலம் நமது உடலில் விட்டமின் ஏ, பொட்டாசியம் உள்ளிட்ட பல்வேறு சத்துக்களை பெற உதவுகிறது. இரவு நேர பார்வை குறைபாட்டை போக்கும் என்பது இந்தியாவில் பொதுவான கருத்தாக உள்ளது. அது மட்டுமல்ல நமது உடலில் மாசு தொடர்பான நோய்களை தவிர்ப்பதற்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெற கேரட் உதவுகிறது என பதிவிட்டுள்ளார்.
Follow Us