Skip to main content

கார் பார்க்கிங்கில் உறங்கிய குழந்தை; கவனக்குறைவால் உயிரிழந்த சோகம்

 

 A car that ran over a sleeping child in a car park; Police investigation

 

ஹைதராபாத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பின் கார் பார்க்கிங்கில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை மீது கார் ஒன்று ஏறி விபத்தான சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர்கள் ஹைதராபாத்தின் ஹையத் நகரில் தங்கி இருந்து கூலி வேலை செய்து வருகின்றனர். அவர்களில் கவிதா என்ற பெண் ஒருவர் அருகில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பின் கார் பார்க்கிங்கில் தனது மூன்று வயது பெண் குழந்தையை தூங்க வைத்துவிட்டு வேலைக்குச் சென்றுள்ளார்.

 

அந்த நேரத்தில் வீட்டிற்கு காரில் திரும்பிய குடியிருப்புவாசி ஒருவர் குழந்தை கார் பார்க்கிங்கில் படுத்திருப்பதை கவனிக்காமல் காரை இயக்கிய நிலையில் காரின் முன்சக்கரம் குழந்தை மேல் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்தது. இந்த காட்சிகள் கார் பார்க்கிங்கில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !