Skip to main content

பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து... 8 பேர் உயிரிழப்பு!

 

Car overturned in a ditch accident... 8 people died!

 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தில் சென்றுகொண்டிருந்த கார் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மூவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.