வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேர் பலியான சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மராட்டியம் மாநிலம் ஜல்காவ் மாவட்டத்தை சேர்ந்தவர் பாலு நாராயண் சவுத்ரி. இவர் அப்பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக தன் மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் 15 பேருடன் வாகனம் ஒன்றில் திருமணத்திற்கு சென்றுள்ளனர். திருமண நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு மீண்டும் அதே நாள் இரவு வீட்டுக்கு திரும்பி வந்துகொண்டிருந்தனர்.

Advertisment

இரவு 11 மணி அளவில் ஹிங்கோலா பகுதியில் வாகனம் வந்துகொண்டிருந்த போது எதிரே வந்த லாரியின் மீது அந்த வாகனம் மோதியுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 12 பேர் பலியானார்கள். மூவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலிசார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.