Advertisment

'காரில் அடைத்து கூட்டுப் பாலியல் வன்கொடுமை' - நான்கு இளைஞர்கள் கைது

 'Car gang incidente'-four youths arrested

பெங்களூருவில் 19 வயது இளம்பெண் காரில் கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தில் 4 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Advertisment

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த 15 ஆம் தேதி கோரமங்களா பகுதியில் 19 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் அங்கிருந்த பூங்கா ஒன்றில் ஆண் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் இளம்பெண்ணை காரில் கடத்தி சென்றதாகக்கூறப்படுகிறது. கார் கோரமங்களா பகுதியிலிருந்து ஓசூர் சாலையில் 40 கிலோமீட்டர் வரை பயணித்து அத்திப்பள்ளி என்ற பகுதி வரை சென்றுவிட்டு மீண்டும் கார் கோரமங்களா பகுதிக்கே வந்துள்ளது. இந்த பயண இடைவெளியில் இளம்பெண் பலமுறைகூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு அங்கு மீண்டும் அந்தப் பெண்ணை கீழே இறக்கி விட்டுள்ளனர்.

Advertisment

இதுகுறித்து போலீசாரிடம் அந்த பெண் புகாரளித்த நிலையில் இதுதொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் நான்கு பேரை கைது செய்த போலீசார். கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு பயன்படுத்திய காரையும் கண்டுபிடித்தனர். பெங்களூருவில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bengaluru Investigation police
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe