
கர்நாடகாவில் காரும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 10 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கர்நாடகா மாநிலம் குருப்பூர் அருகே காரும் தனியார் பேருந்து ஒன்றும் மோதி கொடூர விபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணம் செய்த இரண்டு குழந்தைகள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் சிலர் கவலைக்கிடமாக உள்ள நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 10க்கும் மேலாக அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தற்பொழுது வரை மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.