கடந்த பிப்ரவரி மாதம் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் இன்று காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு படையினர் பேருந்து சென்ற இடத்தில கார் குண்டு வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீரின் ரம்பன் பகுதியில் உள்ள பனிஹால் எனும் இடத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த கார் திடீரென பெரும் சத்தத்துடன் வெடித்தது. இந்த குண்டு வெடிப்பிற்கு சற்று நேரத்திற்கு முன் அந்த பகுதி வழியாக இந்திய பாதுகாப்பு படையினர் பயணித்த பேருந்து சென்றது. அந்த பேருந்து அந்த இடத்தை கடந்த சிறிது நேரம் கழித்து இந்த குண்டு வெடித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்ற பாதுகாப்புப் படையினர் அங்கு ஏற்பட்ட தீயை அணைத்தனர்.