/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/996_154.jpg)
குஜராத்தில் பேருந்தும்காரும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
குஜராத் மாநிலம் நவ்சாரி மாவட்டத்தில்மும்பை - அகமதாபாத் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று எதிரே வந்த கார் மீதுநேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காரில் பயணித்த 9 பேரும் சம்பவஇடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், பேருந்தில் பயணித்த 28 பேர் காயமடைந்தனர். அதில் 11 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களைமீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் நடத்திய முதற்கட்டவிசாரணையில், பேருந்து ஓட்டுநருக்குதிடீரென மாரடைப்பு ஏற்பட்டதால்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது தெரியவந்துள்ளது.மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)