Advertisment
உத்தரகாண்ட் மாநிலத்தில் நிகழ்ந்த கார் விபத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூர்க்கிபகுதியில் கார் கட்டுப்பாட்டை இழந்துசாலையோரத்தடுப்புச் சுவற்றில் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் காரில் பயணித்த பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் பலத்த காயம் அடைந்துள்ளார். உத்தரகாண்டில் இருந்து டெல்லிக்கு காரில் திரும்பும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்டத்தகவல்கள் வெளியாகியுள்ளது.