முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் கடந்த 08/12/2021 அன்று பிற்பகல் நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் விபத்தில் சிக்கி கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் பிபின் ராவத்தோடு பயணித்த அவரது மனைவி மதுலிகா ராவத் உட்பட 11 இராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் சிக்கிய கேப்டன் வருண் சிங் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார். அவருக்குத் தொடர்ந்து தீவிர சிகிச்சையளிக்கப்பட்டுவந்த நிலையில், அவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனை இந்திய விமானப்படைஅதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கேப்டன்வருண்சிங்கின்மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, "குரூப் கேப்டன் வருண்சிங்பெருமையுடனும், வீரத்துடனும் மற்றும் மிகுந்த தொழில்முறையுடனும் தேசத்திற்குச் சேவையாற்றினார். அவரது மறைவால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். தேசத்திற்கு அவர் ஆற்றியபெருஞ்சேவையைஎன்றும் மறக்க முடியாதது. அவரது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் அனுதாபங்கள். ஓம் சாந்தி"எனக்கூறியுள்ளார்.