காங்கிரஸில் இருந்து விலகுகிறார் கேப்டன் அமரீந்தர் சிங்!

captain amarinder singh

பஞ்சாப் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் நிலையில், அம்மாநிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் தொடர்ந்துவருகிறது. அண்மையில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், அமரீந்தர் சிங்கிற்கும் இடையே நடைபெற்று வந்த மோதலை நிறுத்த, சித்து பஞ்சாப் மாநில காங்கிரஸின் தலைவராக்கப்பட்டார்.

இருப்பினும் கோஷ்டி பூசல் தீரவில்லை. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரு தரப்பினர் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங்கிற்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர். இதனையடுத்து, கேப்டன் அமரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்துசரண்ஜித் சிங் சன்னி என்பவர் பஞ்சாபின்புதிய முதல்வராக்கப்பட்டார். அதேநேரத்தில், பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக இருந்த சித்துதனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இதற்கிடையேகேப்டன் அமரீந்தர் சிங் நேற்று (29.09.2021) மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார். இதனால் அவர் பாஜகவில் இணையப்போவதாகதகவல் வெளியானது. இதற்கிடையே, இன்று காலை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலையும்சந்தித்தார். இது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், கேப்டன் அமரீந்தர் சிங்காங்கிரஸில்இருந்து விலகப்போவதாக அறிவித்துள்ளார். அதேநேரத்தில்பாஜகவில் சேரப்போவதில்லைஎன கூறியுள்ள அவர், "மூத்த தலைவர்கள் முற்றிலும் ஒதுக்கிவைக்கப்பட்டதால் காங்கிரஸ் கீழ்நோக்கி செல்கிறது.என்னை அவமானகரமான முறையில் நடத்தியிருக்க கூடாது. இதுபோன்ற அவமானங்களை நான் ஏற்கமாட்டேன்" எனவும் தெரிவித்துள்ளார்.மேலும், அஜித் தோவலுடனானசந்திப்பில், பஞ்சாபின்பாதுகாப்பு சூழ்நிலை குறித்து ஆலோசித்ததாக கூறியுள்ள கேப்டன் அமரீந்தர் சிங், "சித்து கூட்டத்தை இழுப்பவர். ஆனால் ஒரு குழுவை எப்படி வழிநடத்திச் செல்வது என்பது அவருக்குத் தெரியாது" எனவும் தெரிவித்துள்ளார்.

captain amarinder singh congress
இதையும் படியுங்கள்
Subscribe