Skip to main content

மோசமான பிரிவில் தலைநகர்; 50 சதவிகிதம் அதிகரித்த பாதிப்பு

 

Capital in the worst ; 50 percent increased vulnerability

 

தலைநகர் டெல்லியில் காற்று மாசின் அளவு அவ்வப்பொழுது அபாய அளவை எட்டி நடுங்க வைக்கும். இதனால் அங்கு வசிக்கும் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகும் நிலை தற்பொழுது வரை தொடர்கதையாக உள்ளது. அண்டை மாநிலங்களான ஹரியானா, பஞ்சாப் பகுதிகளில் தீயிட்டு கொளுத்தப்படும் வேளாண் கழிவுகளால் டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில் வெளியான புதிய தரவுகள் மேலும் அதிர்ச்சியைக் கூட்டியுள்ளது.

 

டெல்லியில் காற்று மாசு காரணமாக பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தரவுகள் வெளியாகி உள்ளது. டெல்லி மருத்துவமனைகளில் சுவாசக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை 40 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்றின் தரக் குறியீடு மிகவும் மோசமான பிரிவிலேயே உள்ளதாக டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !