ADVERTISEMENT

செங்கொடியால் சிவந்த நாட்டின் தலைநகர் டெல்லி!!

11:29 PM Sep 05, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

ஏழை விவாயிகளின் கடன் தள்ளுபடி,காண்ட்ரக்ட் முறையை ஒழிக்க வேண்டும், ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்து விவசாயிகளின் பொருட்களுக்கு லாபம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், மாதம் குறைந்த பட்ச ஊதியமாக 18 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற பல கோரிக்கையை வலியுறுத்தி இன்று தலைநகர் டெல்லியில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் கடந்த ஒரு வாரம் முதலாக நாடு முழுவதும் பல்லாயிர கணக்கான விவசாயிகள்,தொழிலாளர்கள் கூட தொடங்கினர். மாநில வாரியாக மைதானத்தில் இடம் பிரிக்கப்பட்டு இருந்தது. டெல்லி மாநில அரசு சார்பில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தது. பல்லாயிரக்கணக்கான பேர்களுடன் லால்சலாம் முழக்கத்துடன் பேரணி தொடங்கி பாராளுமன்ற வீதி வழியாக பேரணி சென்றது. டெல்லியில் கடந்த பத்து ஆண்டுகளில் தொழிலாளர்களால் நடத்தப்பட்ட மிக பெரிய பேரணி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறிப்பிட்டு இருக்கிறது.

பணிபாதுகாப்பு, இயற்கை சீற்றங்களால் பாதிக்கபடும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தரவேண்டும், விவசாய தொழிலாளிகளுக்கான தனி சட்டம் வேண்டும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு ஒன்றரை மடங்கு விலை தரவேண்டும், ஏழை விவாயிகளின் கடன் தள்ளுபடி ,காண்ட்ரக்ட் முறையை ஒழிக்க வேண்டும், ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்து விவசாயிகளின் பொருட்களுக்கு லாபம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும், உள்ளிட்ட 13 கோரிக்கைகளை முன்வைத்து இந்த பேரணியானது நடைபெற்றது.

இந்த பேரணியில் சிஐடியு தொழில் சங்கத்தை சார்ந்த தொழிலாளர்கள், கிஷன் சபா அமைப்பை சேர்ந்த விவசாயிகள், அனைத்திந்திய விவசாய தொழிலாளர்கள் அமைப்பை சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சீத்தாராம் யெச்சூரி,கிஷான் சபா தலைவர் அசோக் தவாலே, பிராகாஸ் காரத்,பிருந்தா காரத் ஆகியோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT