Advertisment

தமிழகத்திற்கு நீர் திறக்க முடியாது - கர்நாடக தரப்பு பிடிவாதம்

Can't open water to Tamil Nadu-Karnataka insists

Advertisment

த‌மிழகத்தின் குறுவை சாகுபடிக்காக காவிரியில் கர்நாடகா சார்பில் அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என டெல்லியில் நேற்று முன்தினம் (26.09.2023) நடந்த காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 87வது கூட்டத்தில் பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு கர்நாடகாவில் உள்ள அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு கன்னட அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதேபோல் தமிழகத்திலும்விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மீண்டும் காவிரி விவகாரம் தீவிரமடைந்துள்ளது.

இன்று கர்நாடகாவில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரியத்தின் அவசரக் கூட்டத்தில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என கர்நாடக தரப்பு அதிகாரிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் தமிழக தரப்பு அதிகாரிகள் சார்பில் கர்நாடக அணைகளில் 50 டி.எம்.சி நீர் இருப்பதால் 12,500 கன அடி நீரை கர்நாடக திறந்துவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு 3000 கன அடி நீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு காவேரிமேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Tamilnadu karnataka
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe