Advertisment

நெட் தேர்வு தேதி அறிவிப்பு - செப்டம்பர் ஐந்தாம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!

UGC NET

நெட் தேர்வு (NET), அக்டோபர் 6 முதல் 11 ஆம் தேதி வரை நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும், இந்த தேர்வுக்கு செப்டம்பர் 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும், செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

Advertisment

மேலும், நெட் தேர்வு விண்ணப்பத்திற்கான கட்டணத்தைச் செலுத்த அக்டோபர் ஆறாம் தேதி கடைசி நாள் எனவும் தேசிய தேர்வு முகமை கூறியுள்ளது. நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், ugcnet.nta.nic.in என்ற இணைய முகவரியில் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

கரோனா காரணமாகத் தள்ளிவைக்கப்பட்ட டிசம்பர் 2020 நெட் தேர்வும், ஜூன் 2021-ல் நடைபெற வேண்டிய நெட் தேர்வும் தற்போது ஒன்றாக நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

national testing agency NET Exam
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe