/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Aishwarya Arjun.jpg)
‘விஸ்மய‘ கன்னட மொழி திரைப்படத்தின் படப்பிடிப்பில் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை சுருதி ஹரிகரன் கொடுத்த புகாரின் பேரில் நடிகர் அர்ஜூன் மீது பெங்களூரு கப்பன்பார்க் போலீசார் சனிக்கிழமை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இந்த நிலையில் நடிகர் அர்ஜூனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா கூறியதாவது:-
நடிகை சுருதி ஹரிகரன் எனது தந்தை அர்ஜூன் மீது பாலியல் புகார் அளித்துள்ளார். நடிகை சுருதி ஹரிகரன் மீது நாங்கள் புகார் கொடுத்ததால் அவரும் போலீசில் புகார் செய்துள்ளார். சம்பவம் நடந்து 2 ஆண்டுகள் ஆகிறது. இந்த 2 ஆண்டுகளாக அவர் ஏன் புகார் கொடுக்கவில்லை?. இந்த விவகாரத்தில் சுருதி ஹரிகரன் பின்னணியில் யாரோ இருக்கிறார்கள். அந்தநபர் கூறியதுபோன்று சுருதி ஹரிகரன் செய்து வருகிறார்.
நடிகை சுருதி ஹரிகரனுக்கு நடிகர் சேத்தன் ஆதரவு தெரிவித்துள்ளார். ‘ப்ரேமா பரஹா‘ படத்தின் ‘போட்டோ ஷீட்‘ நடந்தபோது சேத்தன் எனது கன்னத்தை தட்டினார். இரவு உணவுக்கு அழைத்தார். இது பாலியல் தொல்லையா?. இதுபற்றி புகார் செய்ய முடியுமா?.
இவ்வாறு அவர் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)