supreme court

மஹாராஷ்ட்ராமாநில மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு வகிக்கும் மராத்தா சமூகத்தினருக்கு, கடந்த 2018ஆம் ஆண்டு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு வழங்கப்பட்ட இந்த இடஒதுக்கீடு, இடஒதுக்கீடுஎன்பது 50 சதவீதம்தான்இருக்க வேண்டும் என்ற விதிமுறையைமீறுவதாகக் கூறி, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

Advertisment

இதனையடுத்துமராத்தா இடஒதுக்கீட்டிற்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இந்த வழக்கில் இன்று (08.03.201) விசாரணை நடத்திய நீதிபதிகள், இடஒதுக்கீடு 50 சதவீதத்தை தாண்டலாமா? என்பது குறித்து பதிலளிக்குமாறு அனைத்து மாநிலங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு வரும் மார்ச் 15 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.

Advertisment

தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் உள்ளது. இதற்கு எதிரான வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.