Advertisment

பண்டிகைகளுக்குப் பட்டாசு வெடிக்க வருடம் முழுவதும் தடை - மேற்குவங்க உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !

calcutta hc

Advertisment

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், இந்தியாவில் சில மாநிலங்கள் பட்டாசு வெடிக்கத்தடை விதித்துள்ளன. சில மாநிலங்கள் பசுமை பட்டாசுகளுக்கு மட்டும் அனுமதியளித்துள்ளன. இந்தச்சூழலில்மேற்குவங்கமாநிலத்தில், பசுமை பட்டாசுகளைவெடிக்க மட்டும் அம்மாநில அரசு அனுமதியளித்திருந்தது.

இந்தநிலையில்கரோனாகாலத்தில், மக்களின் ஆரோக்கியத்திற்கானஉரிமையை பாதுகாக்கப் பட்டாசு வெடிப்பதற்குத்தடை விதிக்க வேண்டும் எனச் சுற்றுச்சூழல்ஆர்வலர் ஒருவர் மேற்குவங்க உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த நிலையில்இந்த வழக்கைஇன்று விசாரித்த உச்சநீதிமன்றம், மேற்குவங்கத்தில் பசுமை பட்டாசு உட்பட அனைத்து வகை பட்டாசுகளுக்கும்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தீபாவளிக்கு மட்டுமின்றி இந்த வருடம் நடைபெறவுள்ள சத் பூஜை, குருநானக் ஜெயந்தி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பண்டிகைகளுக்கும் பட்டாசுகளைவெடிக்கத்தடை விதித்தும்மேற்குவங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

high court west bengal
இதையும் படியுங்கள்
Subscribe