பாலத்திலிருந்து யாரோ ஆற்றில் குதிப்பதை பார்த்தேன்- சித்தார்த்தா மாயமான விவகாரத்தில் மீனவர் பரபரப்பு வாக்குமூலம்...

கர்நாடக முன்னாள் முதல்வரான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனும், காபி டே நிறுவனத்தின் உரிமையாளருமான சித்தார்த் நேற்று இரவு திடீரென மாயமாகியுள்ளது கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

cafe coffee day siddharthaa missing case

போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ள நிலையில், அவர் காணாமல் போனதாக கூறப்படும் நேத்ராவதி ஆற்றுப்பகுதியில் இருந்த மீனவர் ஒருவர், அங்குள்ள பாலத்தில் இருந்து யாரோ குதிப்பதை பார்த்ததாக ஊடகங்களில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த நேரத்தில் பலத்த மழை பெய்ததால் அவருக்கு உதவி செய்ய முயற்சித்தும் முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளார். 65 வயதான அந்த மீனவர் இது குறித்து மேலும் தெரிவிக்கையில், பலத்த மழையிலும் படகை அந்த இடத்திற்கு கொண்டுசென்று பார்த்ததாகவும். ஆனால் அங்கு யாரும் இல்லாததாகவும் கூறியுள்ளார்.

coffee day karnataka s.m.krishna
இதையும் படியுங்கள்
Subscribe