Advertisment

கேபிள் பாலம் இடிந்து 32 பேர் உயிரிழப்பு...

cable bridge collapse

கேபிள் பாலம் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 32 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குஜராத் மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

குஜராத் மாநிலம் மோர்பியில் சத்பூஜைக்காகஆற்றை கடந்து கேபிள் பாலத்தில் மக்கள் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆற்றில் மூழ்கிய பலரை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். படுகாயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பல நான்கு லட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும், படுகாயம் அடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என குஜராத் மாநில அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நிகழ்ந்தஇந்த பாலமானது கடந்த ஐந்து நாட்களுக்கு முன்புதான் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தகுந்தது.

Advertisment

Rescue Gujarath Bridge
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe