Advertisment

கோவாவில் அமைச்சரவை மாற்றமா?

Cabinet reshuffle in Goa?

Advertisment

கோவாவில் அமைச்சரவை மாற்றி அமைக்கப்படலாம் என்ற பேச்சுகள் எழுந்துள்ள நிலையில், அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சாவந்த் ஆளுநரைச் சந்தித்துள்ளார்.

கோவாவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் திகம்பர் காமத் உள்பட எம்.எல்.ஏ.க்கள் 8 பேர் ஆளும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலருக்கு அமைச்சரவையில் இடம் தரப்படலாம் என பேச்சுகள் எழுந்தன. அதை உறுதிப்படுத்தும் வகையில் முதலமைச்சர் பிரமோத் சாவந்த் ஆளுநரைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

எனினும், செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் பிரமோத் சாவந்த், அமைச்சரவை மாற்றம் தொடர்பாக, ஆளுநரிடம் விவாதிக்கப்படவில்லை என கூறினார். அதேபோல், வரும் செப்டம்பர் 17- ஆம் தேதி அன்று பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் குறித்து மட்டுமே விவாதித்ததாக தெரிவித்துள்ளார்.

congress Goa
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe