ADVERTISEMENT

தொலைத்தொடர்புத் துறையில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் மத்திய அரசு!

06:32 PM Sep 15, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் தொலைத்தொடர்புத் துறையில், நேரடி வழியில் (automatic route) 100 சதவீத நேரடி அந்நிய முதலீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மத்திய அரசின் அனுமதியின்றியே தொலைத்தொடர்புத் துறையில் வெளிநாட்டு நிறுவனங்களால் நேரடியாக 100 சதவீத முதலீட்டைச் செய்ய முடியும்.

தற்போது வரை மத்திய அரசின் அனுமதியின்றி வெளிநாட்டு நிறுவனங்களால், இந்தியத் தொலைத்தொடர்புத் துறையில் 49 சதவீத முதலீட்டை மட்டுமே நேரடியாகச் செய்யமுடியும் என்ற நிலை இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும் தொலைத்தொடர்புத் துறையில் மத்திய அரசின் அனுமதியின்றி 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு என்பது பாகிஸ்தான் மற்றும் சீனா ஆகிய நாடுகளைச் சேர்ந்த முதலீட்டாளர்களுக்குப் பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT