Advertisment

இடைத் தேர்தல் முடிவுகள்; 2 தொகுதிகளில் பாஜக வெற்றி

BY Election Results BJP wins in 2 constituencies

Advertisment

6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டமன்றத்தொகுதிகளுக்கு கடந்த 5 ஆம் தேதி இடைத் தேர்தலுக்கானவாக்குப்பதிவு நடைபெற்றது. இதையடுத்து இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் மதியம் 12 மணி நிலவரப்படி ஜார்கண்ட் மாநிலத்தின் டும்ரி தொகுதியில் அனைத்து ஜார்க்கண்ட் மாணவர்கள் சங்கம் கட்சியின் சார்பில் போட்டியிட்ட யசோதா தேவி முன்னிலை வகித்து வருகிறார். கேரளா மாநிலம் புதுப்பள்ளி தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சாண்டிஉம்மன் முன்னிலை வகித்து வருகிறார். திரிபுரா மாநிலத்தில் பாக்‌ஷா நகரில் பாஜக சார்பில் போட்டியிட்ட டஃபஜிஜால் ஹூசைனும், தனாபூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பிந்து தீனபந்தும் வெற்றி பெற்றுள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் கோஷி தொகுதியில் போட்டியிட்ட சுதாகர் சிங் முன்னிலை வகித்து வருகிறார். உத்தரகாண்டில் உள்ள பகேஷ்வர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட பார்வாடி தாஸ் முன்னணியில் உள்ளார். மேற்கு வங்க மாநிலம் துப்குரி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட தபாசி ராய் முன்னணியில் உள்ளார்.

congress
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe