உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான கொலிஜியம், உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிகளுக்கு ஒன்பது நீதிபதிகளைப் பரிந்துரை செய்துள்ளது. இந்த ஒன்பது நீதிபதிகளில்மூன்று பேர் பெண் நீதிபதிகள்.
இந்த மூன்று பெண் நீதிபதிகளில்ஒருவரானபி.வி. நாகரத்னாவிற்குஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது உச்ச நீதிமன்றநீதிபதியாக நியமிக்கப்படவுள்ள அவர், சீனியாரிட்டி அடிப்படையில் 2027ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்படலாம். அவ்வாறுபி.வி. நாகரத்னா தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கும் முதல் பெண்ணாக அவர் இருப்பார்.
பி.வி. நாகரத்னாவின்தந்தை இ.எஸ். வெங்கடராமையா, ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவி வகித்தவர்என்பது குறிப்பிடத்தக்கது.