Skip to main content

“தேவையான பொருட்களை ஒரே நாளில் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்” - தமிழிசை சவுந்தரராஜன் வேண்டுகோள்..!

Published on 24/04/2021 | Edited on 24/04/2021

 

Buy and keep the necessary items in one day Tamilisai Saundarajan's request

 

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வீடியோ பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் “மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டியதால் இந்த வார இறுதி நாள் ஊரடங்கு. இந்த ஊரடங்கானது அடைப்பு என்பதைவிட, உங்களை அரசு அடைகாக்கிறது என்று பொருள் கொள்ளலாம்.

 

ஊரடங்கு நாட்களில் குடும்பத்துடன் செலவிடுங்கள். வீட்டிலேயும் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியைக் கடைப்பிடியுங்கள். தும்மும்போதும் இருமும்போதும் முகக்கவசம் அணிந்திருந்தால் நல்லது. மிகவும் அவசியம் என்றால் மட்டுமே வீட்டைவிட்டு வெளியே செல்லுங்கள். உங்களுக்குத் தேவையான பொருட்களை ஒரே நாளில் வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். நான் ஏற்கனவே கூறியதுபோல அடைப்பு என்று எடுத்துக்கொள்ளாமல், அரசு உங்களை அடைகாக்கிறது என்று எடுத்துக்கொண்டு பாதுகாப்பாக இருங்கள், கரோனாவை ஒழிப்போம், பாதுகாப்போடு இருப்போம்” என கூறியுள்ளார். 

 

Buy and keep the necessary items in one day Tamilisai Saundarajan's request

 

இதனிடையே, கோரிமேடு காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள காவலர் விருந்தினர் மாளிகை, கோவிட் மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. இதனை தமிழிசை நேற்று (23.04.2021) ஆய்வுசெய்து, அங்கு பிராணவாயு (ஆக்சிஜன்) இணைப்பிற்கான வழிமுறைகள் பற்றிய விவரங்கள் மற்றும் பிற ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “மக்களைப் பாதுகாக்க தேவையான அளவு ஆக்சிஜன் வென்டிலேட்டர் படுக்கைகள், அவசரகால மருந்துகள் கையிருப்பில் உள்ளன. அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் வேண்டிய அளவுக்குப் படுக்கை வசதிகளை தயார்படுத்த கூறியுள்ளோம். தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த சிறப்பு அதிகாரிகளை நியமித்துள்ளோம். 

 

அரசு மற்றும் தனியார் மருத்துவக் குழுவுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அனைத்து மருத்துவமனைகளிலும் படுக்கைகளின் எண்ணிக்கையை உயர்த்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்வதை ஊக்கப்படுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. நடிகர் விவேக் மரணத்திற்குப் பிறகு தடுப்பூசி போடுவது குறைந்துவிட்டது. ஒரு நாளைக்கு 15 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்ட நிலையில், தற்போது அது 1,500 ஆக குறைந்துவிட்டது. நடிகர் விவேக் மரணத்திற்கும் தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனவே எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். எவ்வளவு விரைவாக தடுப்பூசி போட்டுக்கொள்கிறோமோ அவ்வளவு விரைவாக நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உண்டாக ஆரம்பிக்கும்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.