Skip to main content

உ.பி-யில் நடந்த அடேங்கப்பா கொடுமை... மாட்டுகளுக்கு ஸ்வெட்டர் வாங்க நிதிஒதுக்கிய நகராட்சி!

Published on 25/11/2019 | Edited on 25/11/2019

உத்தரபிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, பொதுமக்களை விட பசு மாடுகளுக்கு அதீத முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறது. மாடுகளை பராமரிக்க அதற்கென ஒரு தொகை ஒதுக்கப்பட்டது, தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு அது கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் மாடுகளுக்கு தனி ஆம்புலன்ஸ் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது . இந்நிலையில் அம்மாநிலத்தில் பைசிங்பூர் பகுதியில் கடும் குளிரில் இருந்து காப்பாற்ற பசு மாடுகளுக்கு கம்பிளி வாங்க அந்த மாவட்டத்தில் உள்ள நகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.



முதற்கட்டமாக 13000 மாடுகளுக்கும், 700 காளைகளுக்கும் கம்பளி, கையுறைகளை வாங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோணிப்பை கொண்டு தயாரிக்கப்படும் ஸ்வெட்டர் ஒன்று 250 முதல் 350 ரூபாய் வரை விற்கப்படுகிறது. பசு மாடுகள் கடும் குளிரையும் சமாளிக்கும் வகையில் மூன்று அடுக்காக கோணி பைகள் வைத்து தைக்கப்பட்டுள்ளன. இதனிடையே அரசின் இந்த நடவடிக்கை கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக எதிர்கட்சிகள் மாநில அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மக்களே குளிரில் நடுங்கி சாகும்போது மாடுகளுக்கு ஸ்வெட்டர் அவசியமா? என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளத்தில் போராடிய பசுமாட்டைக் காப்பாற்றிய அமைச்சர்

Published on 09/01/2024 | Edited on 09/01/2024
NN

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ரெங்கப்பநாயக்கன்பட்டியில் வைகை ஆற்று தண்ணீரில் அடித்து வரப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பசுமாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியின் மேற்பார்வையில் மீட்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்மழை பெய்து வருவதை முன்னிட்டு வைகை ஆறு நீர்வரத்து பாதை, குடகனாறு நீர்வரத்து பாதை பகுதிகளில் ஆய்வு செய்த ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கரைப்பகுதியில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஊராட்சி நிர்வாகத்தினர் அவர்களுக்கு முறையான தங்குமிடம் வழங்கவேண்டுமென உத்தரவிட்டார்.

NN

அதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை தாலுகாவிற்கு உட்பட்ட ரெங்கப்பநாயக்கன்பட்டிக்கு சென்று வைகை ஆற்றுப் பாலத்தில் நீர்வரத்து பாதைகளை ஆய்வு செய்தபோது வைகை ஆற்று வெள்ளத்தில் பசுமாடு ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை பார்த்தவுடன் உடனடியாக கிராம மக்கள், கட்சி நிர்வாகிகளை அழைத்து உயிருக்கு போரடிக்கொண்டிருந்த பசு மாட்டை காப்பாற்ற நடவடிக்கை எடுத்தார். 

Next Story

சாலைகளில் சுற்றும் மாடுகள்; உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு, அபராதம் விதிப்பு

Published on 29/10/2023 | Edited on 29/10/2023

 

Cows roaming the roads; Owners will be prosecuted and fined

 

வேலூர் மாநகராட்சி பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், சத்துவாச்சாரி, காகிதப்பட்டறை, அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மாடுகள் சுற்றித் திரிந்து பொதுமக்களை அச்சுறுத்துகின்றன. அந்த வழியாக சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் மாடுகள் மீது வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களை மாடுகள் முட்டித்தள்ளுவதால் காயமடைந்து வருகின்றனர்.

 

சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி அதிகாரிகளுக்கு பல்வேறு புகார்கள் அனுப்பி வந்தனர். பொதுமக்களின் புகாரை அடுத்து மேயர் சுஜாதா உத்தரவின் பெயரில் இன்று மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் சாலையில் சுற்றித்திரிந்த 16 மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்தனர்.

 

பிடிக்கப்பட்ட மாடுகளுக்கு தலா ரூ 1000 அபராதமும்,  மாட்டின் உரிமையாளர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அபராதம் கட்டிவிட்டு மாடுகளை வீட்டுக்கு ஓட்டிச் செல்லலாம். அதுவரை  பிடிக்கப்பட்ட மாடுகள் கோசாலையில் இருக்கும் என அங்கே  ஒப்படைக்கப்பட்டன. கோசாலையில் நாள்தோறும் மாட்டின் பராமரிப்பிற்காக 250 கட்டணம் செலுத்த வேண்டும் என மாட்டின் உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த பணிகளை வேலூர் மாநகர மேயர் சுஜாதா நேரில் சென்று ஆய்வு செய்தார் பின்னர் செய்தியாளரிடம் அவர் கூறும்போது,  மாநகர சாலைகளில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித் திரியும் மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் இன்று பிடித்தனர். அபராத தொகை கட்டியவுடன் மாடுகள் விடுவிக்கப்படும். மாட்டின் உரிமையாளர்கள் யாரும் சாலைகளில் மாடுகளை விடக்கூடாது. இனி சாலையில் சுற்றித்திரியும் மாடுகள் தொடர்ந்து பிடிக்கப்பட்டு மாட்டின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.