Advertisment

தூக்க கலக்கத்தில் கண்டெய்னர் மீது பேருந்தை மோதிய ஓட்டுநர்... 13 பேர் பலி, 31 பேர் காயம்!

கண்டெய்னர் லாரி மீது பேருந்து மோதிய விபத்தில் 13 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்திர பிரதேச மாநிலம் பிரோசாபாத் பகுதியை சேர்ந்த 5க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இன்று அதிகாலை திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது எதிரே தில்லியில் இருந்து பீகார் நோக்கி சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரி ஒன்று வந்துகொண்டிருந்ததது. திருமண நிகழ்ச்சிக்கு செல்வதற்காக வாகனத்தை ஓட்டிவந்த ஓட்டுநர், தூக்க கலக்கத்தில் இருந்ததால் எதிரே வந்த கண்டெய்னர் லாரி மீது மோதியுள்ளார்.

Advertisment

இந்த கோர விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 30க்கும் மேற்பட்டவர்கள் படுங்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை நேரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என்று இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மாநில அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.

accident
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe