மஹாராஷ்ட்ராவில் மீண்டும் செயல்பட தொடங்கிய பேருந்து சேவை!

kjl

இந்தியாவில் மஹாராஷ்ட்ரா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்துவருகிறது. மஹாராஷ்ட்ராவில் 50 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவாக மஹாராஷ்ட்ராவில் கரோனா பாதிப்பு என்பது அதிகப்படியாக இருந்தது. தற்போது பாதிப்பு எண்ணிக்கை சற்று குறைந்துள்ள நிலையில், சில தளர்வுகளை மாநில அரசு அறிவித்துள்ளது.

அதன்படி மாநில முழுவதும் கரோனாவால்பாதிக்கப்பட்ட பகுதிகளை 5 வகைகளாக பிரித்த மாநில அரசு, ஒவ்வொரு பகுதிக்கும் பாதிப்புக்கேற்ற வகையில் தளர்வுகளை அளித்துள்ளது. அதன்படி அதிக பாதிப்புக்குள்ளான மும்பை உள்ளிட்ட பகுதிகளில் தற்போது தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கிடையே நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று (07.06.2021) காலைமுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

CORONAVIRUS LOCKDOWN Maharashtra
இதையும் படியுங்கள்
Subscribe