Bus incident in Tirupati ... PM Modi condoles!

திருப்பதி அருகே பேருந்து கவிழ்ந்து 7 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பகராபேட்டையில் 50 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்து இன்று காலை விபத்துக்குள்ளானது. விபத்தில் அந்த தனியார் பேருந்தில் பயணித்தவர்களில்7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திருப்பதியில் நடைபெற்ற திருமணம் ஒன்றில் பங்கேற்கச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. 7 பேர் உயிரிழந்ததோடு, 40 க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த விபத்து சம்பவம்அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்நிலையில் பிரதமர் மோடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு ரூ 50,000 ரூபாய் இழப்பீடு தரவும் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.