BUS INCIDENT

Advertisment

மத்திய பிரதேசமாநிலம் சிதிபகுதியில்இருந்து சத்னாவிற்கு, 54 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று கால்வாயில் கவிழ்ந்துவிபத்துக்குள்ளானது. பேருந்தைஒட்டிய ஓட்டுநர் வாகனத்தின் கட்டுப்பாட்டைஇழந்ததால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களில் இதுவரை ஏழு பேர் மீட்கப்பட்டுள்ளனர். மற்றவர்களை மீட்கும்பணிகள்தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த விபத்து நடந்த இடத்திற்கு மாநிலபேரிடர்மீட்புப்படை விரைந்துள்ளது. கால்வாய்க்கு வரும் தண்ணீர் வரத்து குறைக்கப்பட்டு மீட்புப்பணிகள் தொடர்ந்து வருகிறது. மத்தியப் பிரதேசமாநில சிவ்ராஜ் சிங் சவுகான், இந்த விபத்து பற்றி மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்துள்ளார். மேலும் மீட்புப்பணிகளை விரைவாக நடத்தவும் அவர் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.