உத்தரபிரதேசத்தில் நடந்த சாலை விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா பகுதியில் யமுனா விரைவுச்சாலையில் லாரி மீது பயணிகள் பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் பயணம் செய்த மேலும் 30 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த பயணிகள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து நொய்டா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.