ஆந்திர மாநிலத்தில் இன்று நடைபெற்ற விபத்தில் 25 பேர் காயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்று காலை ஆந்திராவில் இருந்து குப்பம் பகுதிக்கு அரசு பேருந்து சென்றுள்ளது. அதே போன்று நல்கொண்டாவில் இருந்து ஆந்திர மாநிலம் திருப்பதிக்கு சொகுசு பேருந்து ஒன்று சென்றுள்ளது. சொகுசு பேருந்து பயணத்தின் ஆரம்பம் முதலே அதிவிரைவாக சென்றுள்ளது. இந்நிலையில் சித்தூர் அருகே தனது கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து எதிரே வந்த அரசு பேருந்தின் மீது மோதியுள்ளது.
இதில் நிலைகுலைந்த அரசு பேருந்து அருகில் இருந்த சுவரில் மோதியது. இதில் பேருந்தில் பயணம் செய்த பெரும்பாலானவர்கள் காயமடைந்தனர். 25க்கும் மேற்பட்டவர்கள் இதில் காயமடைந்தனர். இரண்டு பேர் பலியானார்கள். இந்த சம்பவம் ஆந்திர மாநிலத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Follow Us