தெலுங்கானா மாநிலத்தை தேர்ந்தவர் அஸ்மா. இவருக்கு வயது 21. இவருக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருக்கு கடுமையான முதுகு வலி இருந்துள்ளது. இதற்காக இவர் பல மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் நேற்று கடுமையான முதுகுவலி ஏற்படவே, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisment

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். இதை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது யாரும் எதிர்பாராத வகையில் அவரின் முதுகில் இருந்து, துப்பாக்கி குண்டை மருத்துவர்கள் எடுத்துள்ளார்கள். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அவரிடம் துப்பாக்கி குண்டு எப்படி வந்தது என்று விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அதுகுறித்து தனக்கு தெரியாது என்று அவர் பதிலளித்துள்ளார். இந்த சம்பவம் அங்கு கடும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.