குஜராத்தின் ராஜ்கோட் நகரில் சாலையோரம் நின்று கொண்டு அங்கு வரும் மக்களை காளை மாடுஒன்று முட்டும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

bull attacks trespassers in gujarat

Advertisment

Advertisment

மின்கம்பம் அருகே ஒன்றுமறியாதது போல் நிற்கும் அந்த காளை, அந்த வழியாக வந்த மக்களை விரட்டி முட்டுகிறது. அந்த வீடியோவில் முதலில் அந்த வழியே முதியவர் ஒருவர் சைக்கிளை மெல்ல ஓட்டி வந்துள்ளார். அப்போது மறைந்திருந்த காளை திடீரென வேகமுடன் ஓடி வந்து அவரை மோதி கீழே தள்ளி விட்டது.

பின்னர் மீண்டும் மின்கம்பம் அருகே சென்று நின்று கொண்டது. திரும்ப அந்த முதியவர் எழுந்தவுடன் அவரை முட்டி எதிர்வீட்டில் சுவரோடு அழுத்தியது. பின்னர் அங்கிருந்து அவர் சென்ற நிலையில் அடுத்து வந்த வாகனங்களையும் அந்த மாடு முட்டி தள்ளியது. இதில் இருவர் காயமடைந்தனர். இந்த சம்பவத்திற்கு பின்பு அந்த காளை கோசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.