building collapse in Maharashtra’s Bhiwandi

Advertisment

மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் பிவண்டி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள கட்டிடம் இடிந்து விழுந்ததில் உயிரிழப்புஎண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது.

மஹாராஷ்ட்ரா மாநிலத்தின் பிவண்டி பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்று இன்று அதிகாலை 3.20 மணியளவில் இடிந்து விழுந்தது. எதிர்பாராத இந்த விபத்தால், அந்த குடியிருப்பில் வசித்துவந்த குடும்பங்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். கட்டிடம் இடிந்து விழுந்த தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த தீயணைப்புதுறையினர் மற்றும் மீட்புப் படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 20 பேர் இடிபாடுகளிலிருந்து உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தோர்எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது. மேலும் இடிபாடுகளில் குழந்தைகள் உள்ளிட்ட பலர் சிக்கியிருப்பதால் உயிரிழப்புஎண்ணிக்கை உயரும் என்ற அச்சம் நிலவி வருகிறது. இதனிடையே, மீட்புப்படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் விரைந்து ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment