இளைஞர் ஒருவர் எருமை மாட்டை ரயிலில் ஏற்றிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் இளைஞர் ஒருவர் தான் வளர்க்கு எருமை மாட்டுடன் ரயில் நிலையம் வந்துள்ளார். வேறு எதற்காகவோ அவர் வந்திருப்பதாக சக பயணிகள் நினைத்துக் கொண்டிருந்த நிலையில், ரயில் வந்ததும் முதல் ஆளாக தன்னுடைய மாட்டை ஏற்றியுள்ளார்.
உள்ளே சென்ற அவர், மாட்டை அங்கிருந்த கம்பியில் கட்டியுள்ளார். மாடும் ஏதோ புது இடத்திற்கு சென்றதை போன்று படு அமைதியாக இருந்துள்ளது. இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது இணைய தளங்களில் வைரலாகி வருகின்றது. விலங்குகளை பயணிகள் செல்லும் ரயிலில் அழைத்து செல்லக்கூடாது என்ற நிலையில், இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.