நாடாளுமன்றத்தில் 2019-2020 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதில் கங்கை ஆற்றில் நடைபெறும் படகு போக்குவரத்தை நான்கு மடங்கு அதிகரிக்க திட்டம், பேட்டரி வகை வாகனங்களை உற்பத்தி செய்ய நிறுவனங்களை மத்திய அரசு ஊக்குவிக்கும்.
அனைவருக்கும் வீடு மற்றும் கழிப்பறையை உறுதி செய்ய மத்திய அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் பட்ஜெட் உரையில் தகவல். ஒரே நாடு, ஒரே மின்சாரம் திட்டம், சிறு வியாபாரிகளுக்கு பென்ஷன் திட்டம்,ரயில்வே துறையில் தனியார் துறையின் முதலீடு தவிர்க்க முடியாதது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.