Budget presentation in Puducherry after 12 years

புதுச்சேரியில் கடந்த 12 ஆண்டுகளுக்குப் பிறகு முழு நிதிநிலை அறிக்கையை முதல்வர் ரங்கசாமி இன்று தாக்கல் செய்தார்.

Advertisment

புதுச்சேரியில் கடந்த 12 ஆண்டுகளாக முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்குப் பதிலாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தாண்டு முழு பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டு பட்ஜெட் தொகையாக ரூ. 11,600 கோடி நிர்ணயித்து மத்திய அரசின் ஒப்புதலுக்கு புதுச்சேரி அரசு அனுப்பி ஒப்புதல் பெற்றுள்ளது.

Advertisment

இதனைத் தொடர்ந்து புதுச்சேரி பட்ஜெட் கூட்டத் தொடரில் இன்று முதலமைச்சர் ரங்கசாமி முழு பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அதில், புதுச்சேரி பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக மடிக் கணினி வழங்குதல், தமிழ் வளர்ச்சி, ஆராய்ச்சியை மேம்படுத்த புதுச்சேரியில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்தப்படும். மீனவர் உதவித் தொகை ரூ.3,000-ல் இருந்து ரூ.3,500 ஆக உயர்த்தப்படும். மின்துறைக்கு ரூ.1,946 கோடியும், மின் சிக்கனத்தை கடைப்பிடிக்க ரூ. 4.6 கோடியில் எல்.இ.டி தெருவிளக்குகள் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.