2019-2020 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை 11.00 மணியளவில் தாக்கல் செய்கிறார். இந்நிலையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களை சந்தித்து பட்ஜெட்டிற்கு ஒப்புதலை பெற்றார். அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க புறப்பட்டார். அதன் பிறகு கேபினட் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் குறித்து அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை செய்கிறார். அதன் தொடர்ச்சியாக மத்திய பட்ஜெட்டை சரியாக 11.00 மணியளவில் தாக்கல் செய்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்.