ADVERTISEMENT

மத்திய பட்ஜெட்டில் இந்த துறைக்கு மட்டும் அதிக அளவில் நிதி ஒதுக்கீடு!

05:19 PM Jul 05, 2019 | santhoshb@nakk…

மத்திய அரசின் 2019-2020 ஆம் ஆண்டிற்க்கான மத்திய பட்ஜெட்டை மத்திய நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று காலை 11.00 மணிக்கு தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பெண்களுக்கு முத்ரா கடன் வழங்கும் திட்டம், பேட்டரி வாகனங்களுக்கு வரிச்சலுகை, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் ரத்து, அனைவருக்கும் வீடுகள் கட்டி தரும் திட்டம், குடிநீர்களுக்கான திட்டங்கள், சில்லறை வணிகர்களுக்கான ஓய்வூதிய திட்டங்கள் உள்ளிட்ட திட்டங்கள் மத்திய பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது. அதே போல் பெட்ரோல் மற்றும் டீசல் லிட்டருக்கு ஒரு ரூபாய் வரி அதிகரித்தும், தங்கம் மீதான வரியை 12.5% சதவீதமாக அதிகரித்தும், மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. இந்த பட்ஜெட்டில் ராணுவ மற்றும் பாதுகாப்பு துறைக்கு அதிக அளவில் நிதிகள் ஒதுக்கப்பட்டன.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இதில் ராணுவத்துக்கு 3 லட்சத்து 18 ஆயிரத்து 931.22 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 682.42 கோடி ரூபாய் சம்பளம் உள்ளிட்ட செலவினங்களுக்காகவும், 1 லட்சத்து 8 ஆயிரத்து 248.80 கோடி ரூபாய் முதலீடு மற்றும் ராணுவத் துறையை நவீனமயமாக்கும் செலவினங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய பாதுகாப்பு படையினர் ஓய்வூதியத்துக்காக மட்டும் ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 79.57 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையுடன் சேர்த்து பாதுகாப்பு துறைக்கான மொத்த நிதி ஒதுக்கீடு 4 லட்சத்து 31 ஆயிரத்து 10.79 கோடி ரூபாய் ஆகும். இந்த ஆண்டிற்கான மொத்த செலவினத்தில் இந்த தொகை 15.47 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT