Advertisment

பாஜக எம்.எல்.ஏ தலையை கொண்டு வந்தால் 50 லட்சம் பரிசு; முன்னாள் எம்.எல்.ஏ அறிவிப்பு...

fgn

உத்திரப்பிரதேசத்தில் நடைபெற்ற பாஜக பேரணியின் போது மாயாவதி குறித்து அவதூறாகப் பேசிய பாஜக பெண் எம்.எல்.ஏ சாதனா சிங் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு 50 லட்ச ரூபாய் சன்மானமாக வழங்கப்படும் என்று பகுஜன் சமாஜ்கட்சியின் முன்னாள் எம் எல் ஏ விஜய் யாதவ் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பாஜக பேரணியில் கலந்துகொண்ட சாதனா சிங், 'மாயாவதிக்கு சுயமரியாதையே கிடையாது. பெண் இனத்துக்கே அவர் ஒரு கறை. அவர் ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை. மூன்றாம் பாலினத்தவர் போல உள்ளார் என கூறி திரவுபதியுடன் ஒப்பிட்டு பேசினார். இது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாகசாதனா சிங் மீது காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில் அவர் தனது பேச்சுக்காக மன்னிப்பு கேட்டு அறிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் மாயாவதியின் கட்சியில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ விஜய் யாதவ் சாதனா சிங்கின் தலையை கொண்டுவருபவருக்கு 50 லட்சம் தருவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Advertisment

bsp uttarpradesh
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe