பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் தங்களது கட்சியின் முக்கிய தலைவர்களை கழுதை மீது அமர்த்தி ஊர்வலம் நடத்தியது ராஜஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ராம்ஜி கெளதம், ராஜஸ்தானின் முன்னாள் பகுஜன் சமாஜ் கட்சி பொறுப்பாளர் சீதாராம் ஆகியோர் ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் பகுதிக்கு சென்றனர். அப்போது, அவர்கள் இருவரும் கட்சிக்கு அவமதிப்பை ஏற்படுத்தியதாகவும், கட்சியின் கொள்கைக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் கூச்சலிட்ட தொண்டர்கள், அவர்களை தாக்கினர். மேலும் முகத்தில் கருப்பு மை பூசி, செருப்பு மாலை அணிவித்து கழுதை மீது ஊர்வலமாக இழுத்து சென்றனர். இதனால் ஜெய்ப்பூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவத்தை பார்த்த பலரும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருக்கே இப்படி ஒரு நிலையா எனகேள்வி எழுப்ப்பி வருகின்றனர்.