Skip to main content

வாடிக்கையாளர்களுக்கு ஆஃபரை அறிவித்த "பி.எஸ்.என்.எல்" நிறுவனம்!

Published on 04/07/2019 | Edited on 04/07/2019

பி.எஸ்.என்.எல் (BSNL) நிறுவனத்தின் தரை வழி தொலைபேசி இணைப்பு வைத்துள்ள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் கட்டண பில் (BILL RECEIPT)சேவையை பி.எஸ்.என்.எல் நிறுவனம் நிறுத்தியுள்ளது. அதாவது "POSTPAID" எனப்படும், மாதந்தோறும் கட்டணம் செலுத்தும் சேவையை பெற்றுள்ள வாடிக்கையாளர்களுக்கு பி.எஸ்.என்.எல் நிறுவனம், அவர்களுக்குரிய கட்டண ரசீதியை வாடிக்கையாளர்களின் முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்பி வந்தது. ஆனால் தற்போது இந்த சேவையை பி.எஸ்.என்.எல் நிறுவனம் நிறுத்தியுள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் காகித பயன்பாட்டை குறைக்கும் வகையிலும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தை அமல்படுத்தும் வகையில், இத்தகைய நடவடிக்கையை பி.எஸ்.என்.எல் நிறுவனம் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

 

BSNL NETWORK STOP THE MANUAL BILL AND CONVERT E- BILL , MESSAGE IMPLEMENT IN DIGITAL INDIA

 

 

 

மேலும் வாடிக்கையாளர்கள் 'பி.எஸ்.என்.எல்' நிறுவன வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு சென்று தங்களது நிரந்தர தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்தால், வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தை குறுந்தகவல்கள் மூலமாகவும், இ- பில் மூலமாகவும் செலுத்த வேண்டிய கட்டணத்தை எளிதில் அறியலாம் என பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த சேவையை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு இணைப்பிற்கும், மாதாந்திர கட்டணத்தில் இருந்து ரூபாய் 10 தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்துள்ளது. இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள பி.எஸ்.என்.எல் நிறுவன சேவை மையத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மோடியின் புதிய இந்தியாவில் டிஜிட்டல் வழிப்பறி” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
CM MK Stalin tweets about Modi new digital India

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில், தனியார் ஆங்கில இதழ்களில் வெளியான கட்டுரைகளை மேற்கோள்காட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மோடியின் 'புதிய இந்தியா'வில் டிஜிட்டல் வழிப்பறி!. ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் என்று எளிய மக்களின் ஆசையைத் தூண்டி ஆட்சிக்கு வந்தவர்கள் செய்தது என்ன?. சிறுகச் சிறுகச் சேர்த்த பணத்தையும் செல்லாததாக்கி, வங்கிகளில் வரிசையில் நிற்க வைத்து வதைத்தார்கள். சுருக்குப் பையில் இருக்கும் பணத்தையும் பறித்துக் கொள்ளும் ஆட்சியாக, மினிமம் பேலன்ஸ் இல்லை என அபராதம் விதித்தே ரூ.21 ஆயிரம் கோடிக்கு மேல் ஏழைகளிடம் உருவியிருக்கிறார்கள்.

கார்ப்பரேட்களுக்குப் பல லட்சம் கோடி கடன் தள்ளுபடி, கார்ப்பரேட் வரியை 30 விழுக்காட்டில் இருந்து 22 விழுக்காடாக குறைத்து, ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கோடிகளை வரிச்சலுகையாக அள்ளித் தந்துவிட்டு, அதை ஈடுகட்ட, மனதில் ஈரமே இல்லாமல், அல்லற்படும் ஏழை மக்களிடம் அரசே இப்படி டிஜிட்டல் வழிப்பறி செய்வதை அனுமதிக்கலாமா?. இது பணக்காரர்கள், கோடீஸ்வரர்களுக்கான அரசு அல்ல; ஏழைகளுக்கான அரசு எனக் கூசாமல் புளுகுகிறார் பிரதமர் மோடி. இதுவா ஏழைகளின் நலன் காக்கும் அரசு?” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

‘டிஜிட்டல் மயமான இந்தியா...’ - ஜி20 மாநாட்டில் பிரதமர் மோடி

Published on 13/06/2023 | Edited on 13/06/2023

 

pirmeminister modi says digitization changed in india at g 20 summit  

 

ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் ஜி20 அமைப்பின் மாநாடு கடந்த 11 ஆம் தேதி தொடங்கியது. இதில் உறுப்பு நாடுகளின் சார்பில் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொளி மூலம் கலந்து கொண்டு உரையாற்றினர்.

 

அப்போது அவர் பேசுகையில், "கொரோனா தொற்று காரணமாக உலகின் தெற்கு பகுதியில் உள்ள நாடுகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. ரசிய - உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சர்வதேச அளவில் அத்தியாவசியப் பொருட்களான உணவு, எரிபொருள், உரம் ஆகியவற்றுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்த சூழலில் வாரணாசி மாநாட்டில் எடுக்கும் முக்கியமான முடிவுகள் மக்களுக்கு நல்ல பலன் அளிக்கும். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். நமது செயல்பாடுகள் நேர்மையாக இருக்க வேண்டும். நம்முடைய முயற்சிகள் அனைவருக்கும் பலன் அளிப்பதாக இருக்க வேண்டும். இந்தியாவில் முன்னேறத் துடிக்கும் மாவட்டங்கள் என்ற திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுகிறது. அதன்படி 100க்கும் மேற்பட்ட பின் தங்கிய மாவட்டங்களில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் இந்த மாவட்டங்கள் இப்போது நமது நாட்டின் வளர்ச்சிக்கு உந்து சக்தியாக மாறியுள்ளன.

 

ஜி20 அமைப்பின் உறுப்பு நாடுகளின் மேம்பாட்டுத்துறை அமைச்சர்கள், முன்னேறத் துடிக்கும் மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களை ஆய்வு செய்து தங்களது நாடுகளில் இந்த திட்டத்தை செயல்படுத்தலாம். இந்தியாவில் டிஜிட்டல் மயத்தால் புரட்சிகரமான மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. தொழில்நுட்பத்தின் மூலம் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறோம். எங்களது அனுபவங்களை நட்பு நாடுகளுடன் பகிர்ந்துகொள்ளத் தயாராக இருக்கிறோம். இந்தியாவில் ஆறுகள், மரங்கள், மலைகள்,  இயற்கை என அனைத்திற்கும் மரியாதை செலுத்தி வருகிறோம். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வாழ்க்கை முறையைப் பின்பற்றி வருகிறோம். கடந்த ஆண்டு ஐ.நா. சபையின் பொதுச் செயலாளருடன் இணைந்து லைஃப் இயக்கத்தைத் தொடங்கி வைத்தேன். இதன் மூலம் பருவ நிலை மாற்றத்தை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திட்டமிட்ட வளர்ச்சி இலக்குகளை அடைய பாலின சமத்துவம், மகளிருக்கு அதிகாரமளித்தல் அவசியம்.

 

இந்தியாவில் பெண்களுக்கு அதிகாரமளிப்பதுடன் நின்று விடவில்லை. அதையும் தாண்டி பெண்கள் தலைமை தாங்குவதற்கு முன்னுரிமை அளித்து வருகிறோம். இந்தியாவில் வளர்ச்சி மற்றும் மாற்றத்துக்கான முகவர்களாக பெண்கள் திகழ்கின்றனர். பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான செயல் திட்டத்தை ஜி20 அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளும் பின்பற்ற வேண்டும். மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர்கள் புனித தலமான வாரணாசி நகரை சுற்றிப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். அப்போது தான் வாரணாசியின் எழுச்சியை தங்களால் உணர முடியும். இது என்னுடைய பாராளுமன்றத் தொகுதி என்பதால் உரிமையுடன் இதைக் கூறுகிறேன். கங்கை ஆரத்தியை காணுங்கள். சாரநாத்தையும் காணுங்கள். இவை உங்களுக்கு புதிய அனுபவத்தை தரும்" என உரையாற்றினார்.