அதிவேக இணைய சேவையில் ஜியோ, வோடபோன், ஏர்டெல் என பல நிறுவனங்கள் போட்டாபோட்டி போட்டுக்கொண்டு பயனாளர்களுக்கு ஆஃபர்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது பி.எஸ்.என்.எல் நிறுவனமும் புதிய திட்டத்துடன் களத்தில் இறங்கியுள்ளது.
வாடிக்கையாளர்களை கவரும் விதமாக இரண்டு புதிய திட்டங்களை பி.எஸ்.என்.எல் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி 96 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், ஒரு நாளைக்கு 10 GB வீதம் 28 நாட்களுக்கு 280GB டேட்டா பயன்படுத்தலாம். இதேபோல, 236 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால், ஒரு நாளைக்கு 10 GB வீதம் 84 நாட்களுக்கு 840 GB டேட்டா பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.