Skip to main content

எரிக்ஸனுக்கு பணிந்த அம்பானி... பி.எஸ்.என்.எல்.-க்கு பணிவாரா...?

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

எரிக்ஸன் நிறுவனத்தை தொடர்ந்து பி.எஸ்.என்.எல். நிறுவனமும் அனில் அம்பானிக்கு கொடுத்த கடனை திரும்ப பெற தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தை அணுக முடிவுசெய்துள்ளது. 

 

anil ambani

 

ஸ்வீடன் தொலைத்தொடர் சாதனங்களை தயாரிக்கும் நிறுவனமான எரிக்ஸன் நிறுவனத்திற்கு இந்திய நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 500 கோடி நிலுவை தொகை தர வேண்டியிருந்தது. இந்த தொகையை பெறுவதற்கு எரிக்ஸன் நிறுவனம் தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுர்ந்தது. அதனை விசாரித்த தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயம் மார்ச் 19-ம் தேதிக்குள் ரூ.500 கோடியை எரிக்ஸன் நிறுவனத்திற்கு கொடுக்காவிட்டால் அனில் அம்பானி சிறைக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த தொகையை முகேஷ் அம்பானியின் உதவியுடன் அனில் அம்பானி நேற்று திருப்பி செலுத்தினார்.



இந்த நிலையில் பொதுத்துறை தொலைதொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷனிடமிருந்து ரூ.700 கோடியை மீட்க தேசிய நிறுவனங்கள் சட்ட தீர்ப்பாயத்தை அணுக முடிவு செய்துள்ளது.
 

கடன் சுமை, நிதி நெருக்கடி போன்றவற்றுக்கு ஆளாகியுள்ள அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்குத் தர வேண்டிய ரூ. 700 கோடி தொகை நிலுவையில் உள்ளது.
 

பி.எஸ்.என்.எல். நிறுவனம் ஏற்கனவே அந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் சம்பளம் தரவில்லை எனும் குற்றசாட்டு எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராகுலின் அலுவலகத்தில் பி.எஸ்.என்.எல் இணைப்பு துண்டிப்பு!

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

disconnection of BSNL in Rahul gandhi office

 

எம்.பி பதவி நீக்கத்தைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி அலுவலகத்திற்கு வழங்கப்பட்டு வந்த இணைப்பை பி.எஸ்.என்.எல் நிறுவனம் துண்டித்துள்ளது.

 

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தொடர்ந்து அவர் எம்.பி பதவிலியிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு வரும் 13 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. 

 

இதனிடையே ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவருக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அரசு பங்களாவை ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் எம்.பி அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட இலவச டெலிஃபோன் மற்றும் இணையதள இணைப்புகளை பி.எஸ்.என்.எல் நிறுவனம் துண்டித்துள்ளது.

 

 

Next Story

அனில் அம்பானி மீது கட்டாய நடவடிக்கை எடுக்க மும்பை உயர்நீதிமன்றம் தடை! 

Published on 26/09/2022 | Edited on 26/09/2022

 

Bombay High Court prohibits taking compulsory action against Anil Ambani!

 

வரி ஏய்ப்பு வழக்கில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் அனில் அம்பானி மீது கட்டாய நடவடிக்கை எதுவும் மேற்கொள்ள வேண்டாம் என வருமான வரித்துறைக்கு மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

 

ஸ்விஸ் வங்கியில் அவரது பெயரில் உள்ள இரண்டு கணக்குகள் குறித்த விவரங்களை உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே மறைத்ததாகவும், அதனால் 420 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாகவும் அனில் அம்பானி மீது வருமான வரித்துறை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கில் நவம்பர் 17- ஆம் தேதி வரை அவர் மீது எந்தவித கட்டாய நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று வருமான வரித்துறைக்கு உத்தரவிட்ட மும்பை உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் அவர் மீது குற்ற வழக்குப்பதிவு செய்யவும் தடை விதித்தது.