Skip to main content

பி.எஸ்.என்.எல் புதிய ரீசார்ஜ் திட்டம்...

Published on 25/02/2019 | Edited on 25/02/2019

பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். தனது புதிய ரிசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. ஏற்கனவே இருந்த ரூ.666 திட்டம், 129 நாட்கள் வேலிட்டியுடன் மட்டும் இருந்தது. ஆனால், தற்போது  அந்த ரூ.666 திட்டத்தின் வேலிடிட்டி 122 நாள்கள் எனவும், மேலும் 1.5 ஜிபி டேட்டா, எல்லையில்லா வாய்ஸ் கால் எனவும் திட்டத்தை விரிவு செய்து புதிதாக ‘சிக்ஸர் 666’ என அறிவித்துள்ளது.

 

bsnl

 

தொடர்ந்து 333 ரூபாய் திட்டம், 444 ரூபாய் திட்டம் என அசத்திய பி.எஸ்.என்.எல் நிறுவனம் அடுத்ததாகத் தற்போது 666 ரூபாய் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

இந்த ‘சிக்ஸர் 666’ திட்டத்தில் லோக்கல் மற்றும் STD கால்கள் இலவசம். கூடுதலாக நாள் ஒன்றுக்கு 100 SMSகள் இலவசமாக அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, வருகின்ற ஏப்ரல் 30-ம் தேதிக்குப் பின், தற்போது ஒரு நாளுக்கு 1.5 ஜிபி என்று இருக்கும் டேட்டாவை 3 ஜிபி ஆக உயர்த்தப்படுவதற்கும் வாய்ப்பு இருப்பதாகவும் தகவல்கள் வருகின்றது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ராகுலின் அலுவலகத்தில் பி.எஸ்.என்.எல் இணைப்பு துண்டிப்பு!

Published on 08/04/2023 | Edited on 08/04/2023

 

disconnection of BSNL in Rahul gandhi office

 

எம்.பி பதவி நீக்கத்தைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் எம்.பி அலுவலகத்திற்கு வழங்கப்பட்டு வந்த இணைப்பை பி.எஸ்.என்.எல் நிறுவனம் துண்டித்துள்ளது.

 

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தொடர்ந்து அவர் எம்.பி பதவிலியிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு மனு வரும் 13 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. 

 

இதனிடையே ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அவருக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அரசு பங்களாவை ஏப்ரல் 22 ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள ராகுல் காந்தியின் எம்.பி அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட இலவச டெலிஃபோன் மற்றும் இணையதள இணைப்புகளை பி.எஸ்.என்.எல் நிறுவனம் துண்டித்துள்ளது.

 

 

Next Story

4ஜி சேவை கேட்டு பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்! 

Published on 28/07/2022 | Edited on 28/07/2022

 

BSNL employees struggle for 4G service!

 

பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் இணைந்து இன்று நாடு தழுவிய அளவில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு பகுதியாக திருச்சி பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் நுழைவு வாயில் முன்பு ஏ.யு.ஏ.பி சங்கம், தேசிய தொலைத்தொடர்பு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் உள்ள 14,917 டவர்களை தனியாரிடம் ஒப்படைப்பதை கண்டித்தும், உடனடியாக 4 ஜி சேவையை மத்திய அரசு வழங்க முன்வர வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.  

 

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஏ.யு.ஏ.பி. சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அஸ்லம் பாஷா கலந்து கொண்டு பேசுகையில், “பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் டவர்களையும், கண்ணாடியிழை கேபிள்களையும் தனியாருக்கு கொடுப்பதால் ரூ.40 ஆயிரம் கோடி திரட்டும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அதேபோல் 4ஜி சேவையை வழங்க மத்திய அரசால் தேர்வு செய்யப்பட்ட டி.சி.எஸ் நிறுவனத்தால் தங்களுடைய PROOF OF CONCEPT -ஐ நிரூபிக்க முடியவில்லை. அந்நிறுவனம் விதித்த கெடு 2021 நவம்பர் 30 என்பதை முடிந்த நிலையில், தொடர்ந்து கால நீட்டிப்பு செய்து வருகிறது. 4ஜி சேவை வழங்குவதற்கான தொழில் நுட்பம் தன்னிடம் உள்ளது என்பதை நிரூபிக்க முடியாமல் இருக்கும் டி.சி.எஸ் நிறுவனத்தால் எப்படி சேவை வழங்க முடியும்” என்பது குறித்து விளக்கிப் பேசினார். 

 

தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசிற்கு எதிரான கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ஹென்றி தலைமை தாங்கினார். மேலும், சுந்தர் ராஜன், பழனியப்பன், சுப்பிரமணியன், சசிகுமார், சக்திவேல் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் என மொத்தம் 50க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.