Advertisment

கோவில் கருவறையில் மாணவிக்கு அரங்கேறிய கொடூரம் ; பூசாரிக்கு போக்ஸோ

 The brutality of the student in the temple sanctum; Poxo to the priest

பத்தாம் வகுப்பு மாணவியை கோவில் கருவறையில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் சிறையின் கீழ் பகுதியில் வசித்து வந்த பைஜூ என்ற நபர் வர்க்கலா பகுதியில் இருக்கும் கோவில் ஒன்றில் பூசாரியாக வேலை செய்து வந்தான். கடந்த 11ஆம் தேதி கோவிலுக்கு பத்தாம் வகுப்பு மாணவி ஒருவர் சாமி கும்பிட வந்துள்ளார். அந்த நேரத்தில் கோவிலில் வேறு எந்த பக்தர்களும் இல்லாததை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பூசாரி பைஜூ, மாணவியை கோவிலின் கருவறைக்குள் தூக்கிச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

Advertisment

மறுநாள் இது குறித்து அந்த மாணவி பள்ளி ஆசிரியையிடம் நடந்ததைக் கூறி கதறி அழுதுள்ளார். அதிர்ச்சியடைந்த ஆசிரியை, இது தொடர்பாக வர்க்கலா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து பூசாரி பைஜூவை கைது செய்த போலீசார், அவன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கோவில் கருவறையில் வைத்து மீண்டும் ஒரு மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

temple incidnet Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe