Advertisment

பட்டப்பகலில் போலிஸ் கண் முன்னே கோடாரியால் கொலை....உறைந்து நின்ற பொது மக்கள்...

kill

Advertisment

ஹைதரபாத்தில் இன்று பட்டபகலில் நடுரோட்டில்,கோடாரியை கொண்டு அடித்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நிகழ்ந்தேரியபோது, அந்த இடத்தில் போலிஸாரும் இருந்துள்ளனர். சுற்றிலும் பொது மக்கள் இருந்தபோதும் அடையாளம் தெரியாத நான்கு பேர் இந்த சம்பவத்தை செய்துள்ளனர். ஒருவர் கொடாரியை கொண்டு ரமேஷ் என்பவரை அடிக்கும்போது, அதை தடுக்க வந்த பொதுமக்களை விரட்டுவதற்காக கட்டையை வைத்து மீதம் இருந்த மூன்று பேர் துறத்தியுள்ளனர். இன்று காலை நடந்த இச்சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.

கொல்லப்பட்டவரின் பெயர் ரமேஷ் என்றும். அவர் இதற்கு முன்பு மகேஷ் குட் என்பது கொலை வழக்கில் சம்மந்தபட்டிருப்பது தெரியவருகிறது. அந்த வழக்கை நீதிமன்றத்தில் முடித்துவிட்டு வரும் வழியில்தான் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரமேஷ் சம்மந்தப்பட்டிருக்கும் கொலை வழக்கில் கொலைசெய்யப்பட்ட மகேஷ் என்பவரின் உறவினர்கள்தான் இச்செயலை செய்திருக்கிறார்கள் என்று சந்தேகிக்கப்படுகிறது. பின்னர், இந்த கொலையை செய்துவிட்டு அவர்கள் நான்குபேரும் பைக்கில் தப்பித்துவிட்டனர். மஹேஷை கோடாரியை கொண்டு தாக்கும்போது என்னை யாரவது காப்பாற்றுங்கள் என்று கெஞ்சிக்கேட்டுள்ளார். ஆனால், அங்கிருந்த ஒருவராலும் அவரை காப்பாற்ற முடியவில்லை. இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

murder hydrebad
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe