'பிரியாணி' - இந்த உணவு வகைக்குஎந்த நேரத்திலும், கரோனாபெருந்தொடரிலும் கூட மவுசு குறையாது என்பதுமீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது. பிரபலஇணையஉணவு விநியோகநிறுவனமான ஸ்விகி, இந்தாண்டு தங்கள் நிறுவனம் விநியோகித்த உணவுகள் பற்றி புள்ளி விவரங்களை வெளியிட்டது. அதில் அதிகமாக ஆர்டர்செய்யப்பட்ட உணவு வகைகளில்சிக்கன் பிரியாணி முதலிடத்தையும், மசால் தோசை இரண்டாமிடத்தையும் பிடித்துள்ளன.
இந்தாண்டில் பிரியாணி, நொடிக்கு இரண்டுமுறைக்கு மேல் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக ஸ்விகிநிறுவனம் தெரிவித்துள்ளது. அந்தநிறுவனத்தின் புள்ளிவிவரப்படிஇந்தியாவிலேயே அதிகமாக பிரியாணி ஆர்டர் செய்யபட்டது பெங்களூரில். இப்பட்டியலில் மும்பை இரண்டாவது இடத்தையும், சென்னை மூன்றாம்இடத்தையும் பிடித்துள்ளன.
மேலும், மிகவும் சீக்கிரமாகஸ்விகிநிறுவனத்தில் ஆர்டர்செய்ததுசென்னை வாசிகள்தான். அதிகாலை 4.59 மணிக்குஒருவர் 'சீஸ்ப்ரைஸும்', 5 மணிக்குஒருவர் சிக்கன்நூடுல்ஸும் ஆர்டர்செய்துள்ளனர்.
மேலும் ஊரடங்கு காலத்தில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பானிபூரி ஆர்டர்கள் டெலிவரி செய்யப்பட்டதாக ஸ்விகி நிறுவனம் கூறியுள்ளது.