2019 டிசம்பரில் தொடங்கிய கரோனா வைரஸ் பரவல், இன்றும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இரண்டாம் அலையாக, உருமாறிய கரோனா வைரஸ் பரவி வரும் சூழலில், பல நாடுகள்முழு ஊரடங்கை அமல்படுத்திக்கொண்டிருக்கின்றன. கரோனாவால்ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள ஒவ்வொரு நாடும் முயற்சித்து வருகின்றநிலையில், இந்தியாவுக்கு வர இருக்கிறார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்.
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்அடுத்த மாதம் இறுதியில் இந்தியா வருகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறிய பின் முதல் சர்வதேச பயணமாக இந்தியா வர இருக்கிறார். இங்கிலாந்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த பிரிட்டன் பிரதமர் இந்தியா வர இருப்பதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது.